12 வயது மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.. உடந்தையாக இருந்த தாய்! மரண தண்டனை விதிப்பு

0
143

தமிழகத்தின் சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனையும், கணவருக்கு உடந்தையாக இருந்த தாயிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு 15 வயது சிறுமி புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த நிறுவனத்தின் உறுப்பினர் சிறுமியின் புகாரை மகளிர் காவல்நிலையத்தில் அளித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

குறித்த சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததும், அதற்கு சிறுமியின் தாயாரே உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி 7 வயதில் இருந்தே தந்தையால் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவரது 15 வயது வரை இது தொடர்ந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தந்தையால் கர்ப்பமானதை தனது தாயிடம் குறித்த சிறுமி கூறியபோது, அவர் கருவை கலைத்துவிட்டு இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை சூரியன் மற்றும் தாயார் மாதவி ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சூரியன் – மாதவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூரியனுக்கு மரண தண்டனையும், மாதவிக்கு ஆயுள் தண்டனையுடன் 10,000 அபராதமும், தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here