சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப் தொடரில் 12 வயதான சீனாவின் யூ ஜிடி வெண்கலம் வென்றார்.
மகளிர் அணிகளுக்கான 4ஒ200 மீற்றர் ‘பிரீஸ்டைல் ரிலே’ இறுதிப்போட்டியில் பந்தய தூரத்தை 7 நிமிடம், 42.99 வினாடியில் கடந்த சீனா, 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றியது. முதலிரண்டு இடங்களை அவுஸ்திரேலியா (7:39.35), அமெரிக்கா (7:40.41) தட்டிச் சென்றன.
சீன அணியில் 12 வயதான யூ ஜிடி இடம் பெற்றிருந்தார். உலக நீச்சல் சம்பியன்ஷிப் அரங்கில் இளம் வயதில் பதக்கம் வென்ற வீராங்கனையானார். சர்வதேச நீச்சல் போட்டியில், 1936க்கு பின் இளம் வயதில் பதக்கம் கைப்பற்றிய வீராங்கனையானார் யூ ஜிடி.
இதற்கு முன், பெர்லின் ஒலிம்பிக்கில் (1936 ஜெர்மனி) டென்மார்க் வீராங்கனை சோரன்சென் (12 வயது), 200 மீற்றர் ‘பிரஸ்ட்ஸ்டிரோக்’ பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.