இலங்கை வருவதற்கு முன் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கைக்கான விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் பதிவான 754 கொரோனா நோயாளிகளில், இருவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.