1,200 கி.கி தூள் மாயம்: உதவி முகாமையாளர் சிக்கினார்!

0
10

ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து  840,000 ரூபாய் பெறுமதியான No. 1 டஸ்ட், தேயிலை தூள் 60 கிலோ கிராம் நிறை கொண்ட 1,200 கிலோ கிராம்  அடங்கிய 20 பொதிகள் கடந்த 23 ம் திகதி களவாடப்பட்டுள்ளது  என தோட்ட முகாமையாளர்  நிலுஷான் மதுசங்க ஜயவீர , மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு தேயிலை தொழிற்சாலையில் பொருத்த பட்டு இருந்த சீ.சீ.டி வி கெமராக்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..

  23.07.2025.அன்று இரவு 8.30.மணி தொடக்கம் 10.30 மணிக்குள் தேயிலை தூள் அடங்கிய 20 பொதிகள்  தோட்ட உதவி முகாமையாளரால்   லொறிக்கு  ஏற்றப் பட்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்

 ஹட்டன் நீதிமன்ற நீதிவான் அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here