மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் எதிர்கட்சியில் இருந்து கொண்டு விமர்சன அரசியலை மாத்திரம் செய்கின்றனர்.

0
156

மலையகத்தில் கடந்த காலங்களில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு ஒன்றும் செய்யாது தற்போது ஜீவன் தொண்டமான் அவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். என கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்ட அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக நாளந்த வருமானத்தினை இழந்து வழியின்றியிருக்கும் சுமார் 70 குடும்பங்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதேச சபைத்தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இன்று (03) கொட்டகளை தொண்டமான்புரம் பகுதியில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

கண்டி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸை சேர்ந்தவர்கள் தோட்டங்களை விற்பதாக தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த காலங்களிலும் மக்களுக்கு எவ்வித உதவியினையும் செய்யாது விமர்சன அரசியலை மாத்திரம் செய்து பாராளுமன்றம் சென்றவர்கள் எதிர்கட்சியில் இருந்து கொண்டு அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்துள்ளார்களா, அல்லது ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்காவது நிவாரணம் பெற்றுக்கொடுத்துள்ளார்களா? இது யாருக்குமே தெரியாது என்பதல்ல அவர்கள் செய்யவில்லை.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸினை பொருத்த வரையில் அது கண்டி மாவட்டமாக இருக்கலாம் இரத்தினபுரியாக இருக்கலம் பதுளையாக இருக்கலாம் எமது மக்கள் எங்கெல்லாம் செறிந்து வாழ்கின்றனரோ அங்கெல்லாம் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிராகரிக்கின்றது. எந்த ஒரு தனியார் தோட்டமும் சரி கம்பனியும் சரி விற்க வேண்டிய அவசியமும் கிடையாது அதற்கான அதிகாரமும் கிடையாது. வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாதவர்கள் இவ்வாறு விமர்சன அரசியலை மாத்திரம் செய்கின்றனர். என அவர் மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here