கோபம் என்பது அனைவர்க்கும் பொதுவானது. அது ஒரு உணர்ச்சிபூர்வமான போக்கு. சிலருக்கு அது அதிகமாக இருக்கும் , இன்னும் சிலருக்கு குறைவாக இருக்கும். எனினும் அதிக கோவம் ஒரு பாரிய பிரச்சினை என்று உங்களுக்கு தெரியுமா ?
அதிக கோவம் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.அவ்வாறான சூழ்நிலையில், கோபத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். எவ்வாறாயினும் , ஒரு நபர் கோபப்படும் பட்சத்தில் , அவர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழக்கிறார் . புரிந்துகொள்ளவும் சிந்திக்கவும் மூளையின் திறன் குறைவடைகின்றது.நல்லது கெட்டது தெரிவதில்லை.
இந்த கட்டுரையில் கோபத்தை குறைப்பதற்கான வழிகளை தொகுத்துள்ளோம்.
கோபம் என்றால் என்ன? –what is Anger how to control
கோபம் என்பது ஒரு உணர்ச்சி நிலை. இதில், உணர்ச்சிகரமான காயம் மற்றும் ஒருவிதமான எரிச்சல் காரணமாக மனதில் எதிர்மறை உணர்வுகள் தோன்றுகின்றன.
அவ்வாறான உணவுகள் ஒரு மனிதனை ஆதிக்கம் செலுத்தும் போதெல்லாம், அவனது உடல் வெளிப்பாடு மாற்றமடைகிறது இவ்வாறான சூழ்நிலையில், மனிதன் தன்னுடைய கோபத்தை உடல் சைகைகள் ஊடாகவோ , பேசுவதனூடாகவோ , கூச்சலிடுவதன் ஊடாகவோ அல்லது உடல்ரீதியான தாக்குதலினாலோ வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கிறான். இதனால்தான் கோபம் மற்றவர்களுக்கும் தனக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோபத்திற்கான காரணங்கள் – Causes of anger
கோபத்தின் போது மனதில் எதிர்மறை உணர்ச்சிகள் எழுகின்றன, அவை சில சூழ்நிலைகளில் மேலோங்கி நபரை பாதிக்கின்றன. கோபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைப் பற்றி அடுத்து பார்ப்போம்.
#.ஒரு நபரிடம் மனதில் வெறுப்பு.
#.எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் பழைய நினைவுகள்.
#.குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள்.
#.வேலை செய்யும் இடத்தில, அல்லது அலுவலகத்தில் ஏற்படும் வைத்தாக்கங்கள்.
கோபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள்.!
கோபத்தை குறைக்க தலைகீழாக எண்ணுங்கள்
தலைகீழாக எண்ணுவது கோபத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாகும்.இதனூடாக கோவத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.10 முதல் 1 வரை எண்ண முயற்சிக்கவும்.
நீங்கள் கோபத்தில் எதையும் பேசுவதற்கு முன்னர்,சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.மூச்சை இழுத்து விடுங்கள்.இது கோபத்தை கட்டுப்படுத்துவதோடு சிந்திக்க நேரத்தையும் கொடுக்கும்.அந்த இடத்தில தான் பேசும் பதில்களின் விளைவுகள் குறித்து சிந்திக்க வைக்கும்.
நடைப்பயிற்சி
கோபத்தை குறைப்பதில் நடைப்பயிற்சியும் உதவுகின்றது.நடைபயிச்சி மூலமாக கோபத்தை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் , முதலில் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
நடக்கும்போது படிகளை எண்ண வேண்டும். இது நிலைமையை மாற்றும் மற்றும் கோபத்தின் தீவிரத்தை குறைக்க உதவுகின்றது. உங்களுக்கு அடக்க முடியாத கோபம் வரும் நேரத்தில் அந்த இடத்தில இருந்து நகர்ந்து நடப்பது சிறந்தது.
மூச்சை ஆழமாக விடுங்கள்
கோபத்தை எப்படி குறைப்பது என்பது உங்களது சுவாச செயல்பாட்டில் மறைக்கப்பட்டுள்ளது. நிஜமாகவே ங்கள் கோவத்தை குறைப்பதில் கவனம் செலுத்தும்போது, ஒரு சில நிமிடங்களுக்கு மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள்.இது சிறிய தியான முறை போல அமையும்.மனதை அமைதி படுத்த உதவும்.
பாடல்களைக் கேளுங்கள்
கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக மெலோடி இசைகளை கேக்கலாம்.
மனதை நிதானப்படுத்தும் பாடல்களைக் கேட்பதால் கோபம் உக்கிரத்தை தடுக்கலாம்.மனதில் உருவாகும் எதிர்மறை உணர்ச்சிகளைக் கடக்க இசை சிகிச்சை உதவுகிறது.இசை மூலமாக கோபத்தை கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மௌனமாக இருங்கள்
கோபத்தை கட்டுப்படுத்தி உங்களது மனதை சாந்தப்படுத்த ஒரு வழி எதுவும் பேசாமல் மௌனம் காப்பது.அதிக கோபம் ஏற்பட கூடிய சந்தர்ப்பங்களில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்,இது மற்றவருக்கு கேட்கவும் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதோடு மாத்திரமல்லாமல் ஒரு சிறந்த மற்றும் தெளிவான பதிலைக் கொடுக்கவும் இது உதவும்.
நல்ல தூக்கம்அவசியம்
சரியான தூக்கமில்லாதவர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் சரியான தூக்கமல்லாதவர்களுக்கு சிக்கல் காணப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போதிய தூக்கம் இல்லை என்றால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது.பொதியளவிலான தூக்கத்தை பெறுவதனூடாக கோபத்தை இலகுவாக சமாளிக்க முடியும்.
பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்கள்.
முடிந்தவரை மௌனத்தை கடைபிடுங்கள்.
அடுத்தவர்களுக்கு பேசுவதற்கு,பதிலளிப்பதற்கு இடமளியுங்கள்.
உடற்பயிற்சி செய்யுங்கள்.
கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.
வெறுப்பு கொள்ளாதீர்கள்.
பதற்றத்தை விடுவிக்க நகைச்சுவையைப் பயன்படுத்தவும்.