13ஆம் திகதி முதல் பதுளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

0
54

பதுளை பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பதுளை விசாகா பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியன இம்மாதம் 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை விகாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் பதுளை ஊவா உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு 19 மற்றும் 20 திகதி விடுமுறை வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here