13 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி எரியும் கட்டையை வாயில் திணித்த பகீர் சம்பவம்!

0
237

இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் பேய் ஒட்ட அழைத்து வரப்பட்ட சிறுமியை அடித்துஎரியும் கட்டையை வாயில் 3 சீடர்கள் திணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூர் மாவட்டம் – அபான்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியைப் பேய் பிடித்துவிட்டது என்று, அச்சிறுமிக்குப் பேய் ஓட்டுவதற்காக குடும்பத்தினர் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மகாசாமுண்ட் மாவட்டத்திலுள்ள பதேராபலி கிராமத்தில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற இடத்தில் அந்த ஆசிரமம் உள்ளது.பேய் ஓட்ட அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை சீடர்கள் மூன்று பேர் வாயில் எரியும் கட்டையைத் திணித்துச் சூடு வைத்ததாகவும், மேலும் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் அச்சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் குரு மற்றும் சீடர்கள் 2 பேர் உட்பட 3 பேர் தங்களுக்குச் சிறுமி வழங்கிய பாயாசத்தில் விஷம் இருந்ததாகவும், அதனால் தான் அடித்தோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ஆசிரமத்திற்கு இது போல அடிக்கடி பேய் ஓட்ட வரும் ஆட்களைச் சித்திரவதை செய்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரமத்தின் நிலம் மற்றும் ஆசிரம செயல்பாடுகள் உள்ளிட்ட பிற விவரங்களைப் பற்றி மாநில வருவாய்த் துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆசிரம நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here