13 ம் திகதியின் பின்னர் ரணில் முகங்கொடுக்கப் போகும் பாரிய பிரச்சினைகள்

0
195

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக பிரபல ஜோதிடர் கே.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நேரம் மிகவும் மோசமாக உள்ளதாக ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பதவியை விட்டு செல்ல வேண்டிய நிலை வரும்.

இதன் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலுக்கு நாடு முகங்கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியிட்ட தகவல்கள் சரியான முறையில் நடந்துள்ளதாக, யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜோதிடர் கே.சரத்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 12 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை விட்டுவிலக நேரிடும், எதிர்பாராத ஒருவர் ஜனாதிபதியாகுவார், அவரால் இரண்டு மூன்று மாதங்களுக்கே பதவியில் இருக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 7ஆம் திகதி காணப்பட்ட அரசியல் நிலவரங்களை கணித்து கூறிய ஜோதிடர் தற்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here