1300ஆக அதிகரித்துள்ள தொழுநோயளர்களின் எண்ணிக்கை

0
136

கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்களும் இனம்காணப்பட்டுள்ளனர்.தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவினரின் தகவலின் அடிப்படையில், இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 1,300 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,256 நோயாளர்கள் இனம்காணப்பட்டதாக, தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இனம்காணப்பட்ட 1,256 நோயாளர்களில் 256 அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்களும் இனம்காணப்பட்டுள்ளனர்.

மேலும் பதிவாகிய தொழுநோயாளிகளில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்களும் அடங்குவதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

குறித்த சிறுவர்களில் அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதோடு, அவர்களின் எண்ணிக்கை 39 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here