நுவரெலியா மாவட்டத்தின் 133 வருட வரலாற்றினை கொண்ட மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டியினை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி கல்லூரியின் அதிபர் எஸ் ராஜன் தலைமையில் இன்று 08.03.2025 காலை எட்டு மணியளவில் கல்லுரியின் முன்னால் ஆரம்பமானது.
ஆண்களுக்கான போட்டி கல்லூயிலிருந்து புறப்பட்டு ஹோர்லி கிறிஸ்தவ தேவஸ்த்தானம் வரை சென்று மீண்டும் கல்லூரியினை வந்தடைந்தனர்.
பெண்களுக்கான போட்டி கல்லூரியின் முன்னால் ஆரம்பித்து டிக்கோயா வரை சென்று மீண்டும் கல்லூரியினை வந்தடைந்தனர். இதில் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை தோப்பு இல்லத்தைச் சேர்ந்த விசுர்சனி அவர்களும் ஆண்கள் பிரிவில் நெல்சன் இல்லத்தைச் சேர்ந்த கே.சாருஜன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
குறித்த போட்டிகளில் போணேஸ் தோப்,நெல்சன்,செனரத்தன ஆகிய இல்லங்களிலிருந்து 20 மாணவர்கள் வீதம்;; 80 மாணவ மாணவிகள்; கலந்து கொண்டனர்
குறித்த போட்டியின் பரிசளிப்பு கல்லூரியின் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வுக்கு ஹட்டன் கல்வி வலயத்தின் காப்பாளரும் வலய கல்விப்பணிப்பாளருமான ஆர்.விஜேந்திரன்பிரத பிரதம அதிதியாகவும’ சிறப்பு அதிதியாக கோட்டம் ஒன்றின் கோட்டக்கல்விப்பணிப்பாளர் என். சிவகுமார்.அவர்களும் ,பாடசாலைகளிலிருந்து அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்