ஹட்டன் நகரில் பாரிய அளவில் கழிவுகள்~மக்கள் விசனம்..!

0
189

மத்திய மலைநாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான ஹட்டன் நகரில் பாரிய அளவில் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது .

இதனால் பயணிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வர்த்தகர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

பேருந்துகள் தரிப்பிடத்தில் மற்றும் வர்த்தக நிலையங்களில் அருகில் மேலும் இலங்கை மீன் பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலையம் அருகில் பாரிய கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துர் மணம் வீசும் நிலையில் உள்ளது.

சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.அதிகளவில் ஈ நுளம்புகள் உள்ளது என அங்கு உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.

நகரசபை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து அங்கு உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனால் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என பீதியில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here