14 வருடங்களுக்கு பின்பு நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு/ போட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்ற A யசிந்தன் 150 புள்ளியினையும் L பபிஷான்147 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும். பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அத்தோடு 11 மாணவர்கள் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ளமை பாடசாலைக்கு கிடைத்த சாதனையாகும். அந்த வகையில் V. யுனேஷா 127 S.ஹாதிக் 125 N .பிரகலாதன் 118 T.விக்னேஷ் 113 T.ஜெஹான் 111 k. தர்ஷிகா 109 V.ஜேசுவா 105 N.கௌசிக்கா 103 .Y திவாணி 100 என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்றுள்ளனர்..
மாணவர்களின் வெற்றிக்கு பின்புலமாக வகுப்பாசிரியை செல்வி பெ . சண்முகப்பிரியா என்ற ஆசிரியை நேரகாலம் பாராமல் கடும் முயற்சியுடன் தனது கற்பிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்ததன் காரணமாகவே இந்த பெறுபேறுகள் கிடைத்ததாக பாடசாலை அதிபர் கி. சார்லஸ் தெரிவித்தார் இவர் மேலும் தெரிவித்ததாவது.
அவ்வப்போது பெற்றோர்கள் தேவையான நேரத்தில் பல்வேறு வகையில் உதவிகளை வழங்கினர்கள் இதனை நான் பெரிதாகவே கருதுகிறேன்.
அத்தோடு பாடசாலையின் பௌதீக வளங்கள் இல்லாவிட்டாலும் ஆசிரியர்களின் முயற்சியால் பாடசாலையில் 14 வருடங்களுக்கு பின்பு தரம் 5 புலமை பரீட்சையில் சாதனை படைத்தார்கள் . இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு இப்பாடசாலை வளர்ச்சிக்கு தேவையான வளங்களை அதிகாரிகள் பெற்றுக் கொடுத்தால் இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அதிபர் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்