பொதுமக்கள் உத்தண்ணாவை விரட்டி சென்று, ஆத்திரத்தில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்தவர் உத்தண்ணா. இவர் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த வாரம் வெளியே வந்தார்.
இந்நிலையில் உத்தண்ணா, அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிடவே அக்கம் பக்கம் ஓடி வந்துள்ளனர்.
இதைப் பார்த்த உத்தண்ணா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால், பொதுமக்கள் உத்தண்ணாவை விரட்டி சென்று, ஆத்திரத்தில் கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த உத்தண்ணா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் உயிரிழந்த உத்தண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.