14 வயது பாடசாலை மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியர் கைது!

0
155

அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஆபாசப் படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோர் நன்னடத்தை அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து கடந்த 30-05-2023 திகதி அன்று சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் நேற்று (31-05-2023) தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here