விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதனையும் தெரிவிக்க முடியாது, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
புத்தளம் – முந்தலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் புத்தளம் மருத்துவமனை பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில், விஜயகலா மகேஸ்வரனின் உடல்நிலை குறித்து தற்போது எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.