சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி

0
131

நேற்றைய போட்டியில் விராட் கோலி 94 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பதிவு செய்தார்.இந்தியா அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா அணி 288 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி 94 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பதிவு செய்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார்.மேலும் ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ச்சியாக நான்காவது சத்தத்தை பதிவுசெய்துள்ளார்.

இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 47 சதங்கள், 66 அரைசதங்களை பதிவுசெய்துள்ளார்.சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், சனத் ஜெயசூர்யா மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இதற்கு முன்னர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here