இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இதன்படி குறைக்கப்பட்ட விலைகள் வருமாறு,
சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் – 06 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 222 ரூபாய்
உழுந்து ஒரு கிலோ கிராம்- 06 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 549 ரூபாய்
பருப்பு ஒரு கிலோ கிராம் – 05 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 295 ரூபாய்
சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் – 03 ரூபாவினால் குறைப்பு – புதிய விலை 169 ரூபாய்