தொடருந்தில் பயணிப்பவர்களிடம் வினோத திருட்டு: கையும் களவுமாக சிக்கிய இளைஞன்

0
121

கொழும்பில் நவீன கருவியை பயன்படுத்தி தொடருந்தில் பயணிப்பவர்களின் பணப்பையை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது வலது கை விரலில் நவீன சாதனம் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதில் மூன்று வெவ்வேறு வகையான கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பணப்பைகள், பெண்களின் கைப்பைகள், பயணப் பொதிகளில் இருந்த பணம் போன்ற பெறுமதியான பொருட்கள் அந்த சாதனத்தைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமின்றி திருடப்பட்டுள்ளதாக சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here