ஆஸ்துமா தீவிரமடையும் வாய்ப்பு மாணவர்களுக்கே அதிகளவில் பாதிப்பு!

0
164

பாடசாலை மாணவர்கள் தற்போது விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகி வருவதால் அவர்களிடையே ஆஸ்துமா நோய் பாதிப்பு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்து வருவதாக, லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

மாணவர்கள் வெய்யில் காலநிலைக்கு மத்தியில் பல வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இந்த நோய் அதிகரிப்புக்கு மற்றொரு காரணமெனவும், அவர் கூறினார்.ஆகையால் பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பாக பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும், மருத்துவர் தெரிவித்தார். புகைப்பிடிக்கும் இடங்களிலிருந்து சிறுவர்களை விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அவர், சுவாச சிக்கல்கள் அதிகரிப்பை தடுக்க இது பெரிதும் உதவுமென்றார்.

மேலும் தொற்றுநோயை தடுக்க சிறுவர்களுக்கு முகக் கவசத்தை அணிவிப்பதன் மூலம் அவர்களுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்க முடியுமெனவும், அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் தற்போது கை, கால் மற்றும் வாய் நோய்கள் அதிகரித்து வருவதையும் மருத்துவர் சுட்டிக்காட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here