14வது தெற்காசிய விளையாட்டு போட்டி பாகிஸ்தானில்!

0
3
hindutamil

14-வது தெற்காசிய விளையாட்டு போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் 11 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய மூன்று நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இஸ்லாமாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெற்காசிய ஒலிம்பிக் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2021-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இப்போட்டிகள் பலமுறை தள்ளிவைக்கப்பட்டன.

இறுதியாக தற்போது பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. தெற்காசிய விளையாட்டு போட்டி பாகிஸ்தானில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ளது. கடைசியாக 2004-ம் ஆண்டு இஸ்லாமாபாத் நகரில் தெற்காசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here