சிலாபம் பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவர் தாயின் காதலனால் சீரழிக்கப்பட் நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறுமியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, தாய், சந்தேகநபருடன் தொடர்புகளை பேணி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தென்னை நார் தொழிற்சாலையொன்றிலேயே இருவரும் பணிப் புரிந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடந்த ஜுலை மாதம் முதல் தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, சிலாபம் பொதுவைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.