சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
சட்டவிரோதமான முறையில் 36 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 500 கிலோகிராம் மஞ்சள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தககவலினடிப்படையில் நேற்று மாலை குறித்த கைது நடவடக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் பூநகரி பகுதியை சேர்ந்ந 23 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மஞ்சள் தொகையானது இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்ட மஞ்சள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. .