இலங்கையில் செப்டெம்பர் 3ஆம் திகதி நேற்று பொலிஸ் தினம் கொண்டாடப்பட்டது. இம்முறை 156வது தேசிய பொலிஸ் தினம் கொண்டாடப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் தலைமையகம் உட்பட நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக ஒரு வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவகையில் அட்டன் தலைமையக பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் நேற்று (03.09.2022) அட்டன் பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
இங்கு சுமார் 100 பேரிடம் இருந்து இரத்தம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. நாவலப்பிட்டி வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊழியர்கள் இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.
இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன.
மேலும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் நபர்களை பதிவு செய்ததோடு, உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
(க.கிஷாந்தன்)