இலங்கையின் 157 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு நாடளவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன இந்த பொலிஸ் தின நிகழ்வுக்கு இணையாக ஹட்டன் பொலிஸ் நிலையம் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று 03 ம் திகதி மாலை 5.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளை ஹட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெய்கம தலைமையில் நடைபெற்றது.
இந்த நிழ்;வினை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இரத்தானத்தில் பெறப்பட்ட இரத்தம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டன.
அத்தோடு பௌத்த இஸ்லாமிய கிறிஸ்த்தவ ஆலங்களிலும் மத வழிபாடுகளும் இந்நிகழ்வையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நிபுக தெய்கம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹட்டன் பொலிஸ் தலைமைக பொலிஸ் பரிசோதகர்,சிரேஸ்ட பொலி;ஸ் பரிசோதகர் எஸ்.தவக்குமார் உட்பட மாணிக்கப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினர் உட்பட வர்தகர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்