16 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு..! பின்னணியில் பாதிரியார் – வெளியாகிய பகீர் தகவல்

0
177

சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெரோத் மனோகர் என்ற 58 வயதுடையவரும் அவரது 55 மனைவி ஹெலன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்று ஆதம்பாக்கத்தில் தேவாலயம் நடத்தி வந்தனர்.

தேவாலயத்திற்கு வருகை தரும் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் போதகர் தவறாக நடந்து கொள்வார் எனவும் அவரது மனைவி ஹெலனும் அவருக்கு ஆதரவாக இருப்பார் எனவும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், போதகர் மீது முறையாக முறைப்பாடு அளிக்க யாரும் முன்வரவில்லை.

சில நாட்களுக்கு முன், 16 வயது சிறுமியின் பாட்டி, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போதகருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர்.மனோகர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதி செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.இந்த குற்றச்சாட்டில் குற்றத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்ததற்காக அவரது மனைவி ஹெலனும் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தம்பதியினர் பல பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.24 வயது பெண் ஒருவரை பாதிரியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here