மாத்தளை/ பண்டாரபொல தமிழ் வித்தியாலயம் – முவந்தெனிய பாடசாலையில் முதல் முறையாக இசை வாத்திய குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட உள்ளது.
160 வருடகால வரலாற்றை கொண்ட இந்த பாடசாலையின் தற்போதைய அதிபர் திருமதி.எம்.சந்திராதேவி அம்மையாரின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
சிறுவர் விளையாட்டு போட்டியுடன் பாடசாலை இசைக்குழு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதுடன், நிகழ்வின் பிரதம அதிதியாக மாத்தளை வலயக் கல்வி பிரதி பணிப்பாளர் திருமதி.எஸ்.இ.மோனிகா கோமஸ் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்வு மற்றும் இசைக்குழுவிற்கான பயிற்சிகள் மாத்தளை இந்து தேசிய கல்லூரி பழைய மாணவன் .மஹிஷா வர்ணண் அவர்களினால் இதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை குறிப்படத்தக்க விடயமாகும்.





