165 ஆண்டுகால மரபு மாற்றம்: அமெரிக்க ரூபாய் நோட்டுகளில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்து!

0
3
dailythanthi

அமெரிக்க டாலர் நோட்டுகளில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரின் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அமெரிக்காவின் ரூபாய் நோட்டுகளில் கடந்த 165 ஆண்டுகளாக மாறாத இந்த வழக்கத்தையே பின்பற்றி வந்தன.இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் புதிய கருவூல திட்டத்தின் கீழ், புழக்கத்தில் உள்ள அனைத்து புதிய அமெரிக்க ரூபாய் நோட்டுகளிலும் டிரம்பின் கையொப்பம் சேர்க்கப்பட உள்ளது. ஜூலை 4-ம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ள அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தினை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “நமது மாபெரும் நாட்டின் வரலாற்றுச் சாதனைகளை அங்கீகரிக்க, டிரம்பின் பெயர் பொறிக்கப்பட்ட அமெரிக்க டாலர் நோட்டுகளை விட சக்திவாய்ந்த வழி வேறில்லை.

டிரம்பின் பொருளாதார சாதனைகளையும், நாட்டின் 250-வது சுதந்திர தின விழாவையும் சிறப்பிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here