18 வருடங்களுக்கு பின் இணைந்த மம்முட்டி – மோகன்லால்!

0
3

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பேட்ரியாட்’ திரைப்படத்தின் பின்புல (BTS) காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகின் இரு முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணைந்து நடித்திருப்பது ’பேட்ரியாட்’ படத்தின் சிறப்பாகும். இவர்களுடன் பகத் பாசில் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் ஒரே திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ’பேட்ரியாட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்த இந்த படம் திரையுலகில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here