18 சதவீத வட் வரியால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள புத்தகத் துறை

0
9

புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வட் வரியை (VAT Tax) விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பிரேரணையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்தார்.

“அரசாங்கத்திற்கு சில வாரங்களே உள்ளன. இந்த நேரத்தில் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போவதில்லை. மிகத் தெளிவாக ஜனாதிபதி கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வந்து அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதைப் பற்றி பேசுவோம் என்று கூறினார். அதற்கு நேரம் இருக்கிறது. இப்போதே நாங்கள் அதனை நினைவுபடுத்துகிறோம். 60 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் VAT செலுத்த வேண்டும். அதற்கு அவர்கள்தான் தகுதியானவர்கள்..”

VAT காரணமாக விலை அதிகரிப்பு காரணமாக புத்தக விற்பனை 30 வீதத்தால் குறைந்துள்ளதாக தினேஷ் குலதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here