நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த 6992 நாட்கள் கழித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி. ஃபெராரி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜீன் டோடுக்கும், மலேசிய நடிகை மைக்கேல் யோவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் 19 ஆண்டுகள் கழித்து திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
தற்போது யோவுக்கு 60 வயதாகிறது மற்றும் ஜீனுக்கு 77 வயதாகிறது.இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில் 19 ஆண்டுகள் கழித்து (சரியாக 6992 நாட்கள்) இருவருக்கும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
எனது வாழ்க்கையின் அன்பான மைக்கேலுடன் மீண்டும் இணைந்திருப்பதை என்னால் மகிழ்ச்சியுடன் உறுதிப்படுத்த முடியும் என்று ஜீன் தெரிவித்துள்ளார்.