தமிழக மாநில அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பை ஏற்று சென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் சென்றிந்ததோடு நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது முதலாவது கட்ட நிவாரண பொருட்கள் மலையகத்தில் பெரும்பாலானோருக்கு கிடைக்கபெற்றத்தையடுத்து சில குடும்பங்களுக்கு கிடைக்காமலும் போயிருந்தது.ஆகவே இம்முறை மலையகத்தில் வறுமை கோட்டின் கீழ் கஸ்டப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துருந்தார்.
மேலும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள பால்மா விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதனை உடனடியாக வழங்குமாறு அமைச்சின் உணவு பிரிவிற்கான நிறைவேற்று அதிகாரி திருமதி.கிருஸ்ணமூர்த்தியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்