2 வயது குழந்தை விபத்தில் பரிதாப பலி- அம்பாறையில் சம்பவம்

0
131

அம்பாறை (Amparai) பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் குழந்தையொன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு (06.04.2024) இடம்பெற்ற இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 02 வயது 07 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.

ஆலயமொன்றில் குழந்தையுடன் பெற்றோர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, ​​குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி வீதிக்கு வந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here