அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தற்போதைய ஆளும் கட்சியை போல பிரிதொரு கட்சியை பார்க்க முடியாது என்று கூறியிருந்தார். அது உண்மைதான். இதுவரையில் இந்நாட்டிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் இரண்டாம் மாடிக்கு அடிக்கல் நாட்டியதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மின்சக்தி அமைச்சர் இன்று ஒரு ஓவரில் ஆறு சிக்கஸ்ர்களை அடிக்க முயற்சிக்கிறார் என்று கூறிய நளீன் பண்டார எம்.பி, அது வேடிக்கையாக பார்க்க கூடிய விடயமல்ல மிகப்பெரிய மோசடியாகும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவை இவ்வாறான நட்டங்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமென வலியுறுத்திய அவர், மின்சக்தி அமைச்சர் மெகா அளவில் மோசடிகளை ஆரம்பித்திருக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.




