‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியான ‘கேப்டன் மில்லர்’ டீசர் ஒரே நாளில் 20 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாள் அன்று ‘கேப்டன் மில்லர்’ டீசர் மற்றும் தனுஷ் கருப்பு நிற கண்ணாடி அணிந்திருக்கும் போஸ்டர் என்பன வெளியாகியிருந்தது.
இந்த டீசர் தற்போது 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.