குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதற்கு நான் தான் அதிபர் என தனக்கு தானே அறிவித்துக்கொண்ட 20 வயது ஆஸ்திரேலியா இளைஞர் இணையதளத்தில் வைரலாகி வருகிறார்.
இது குறித்து தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞன், குரோஷியா விற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படதாக நிலத்தை வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து அதன் அதிபர் நான் தான் என்று தனக்கு தானே அறிவித்துள்ளார்.
தனிக் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய நாட்டை உருவாக்கிய இளைஞன் டேனியல் ஜாக்சன் இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.