பொகவந்தலா கொட்டியாகலை மேல்பிரிவு பாதை கடந்த 20 வருட காலமாக குன்றும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் இந்த வீதியில் செல்லும் மாணவர்கள் முன்பள்ளி சிறுவர்கள் முதியவர்கள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். குறித்த அசௌகரியங்கள் குறித்து நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கிணங்கு குறித்த பாதை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாதை ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க மத்திய மாகாண ஆளுநர் சுமார் 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த பாதை கொங்கிறீட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
கொட்டியாகலை மேல் பிரிவு தோட்டத்தில் வாழும் சுமார் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொகவந்தலா வைத்தியசாலைக்கு செல்வதற்கும் நகரத்திற்கும் செல்வதற்கும் நாளாந்தம் நூற்றுக் கணக்கான மக்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள பிரதான பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் இந்த பாதையினையே பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்….
கடந்த 20 வருடமாக இந்த பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இந்த பாதையினை அபிவிருத்தி செய்து தருமாறு கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் எவரும் இது குறித்த நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலையில் அண்மையில் மரண வீடு ஒன்றுக்கு இப்பகுதிக்கு நோர்வூட் பிரதேசசபைத்தலைவர் கலந்து கொண்ட போது நாங்கள் இந்த வீதியினை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறுகிய காலத்தில் இந்த பாதையினை அபிவிருத்தி செய்தமைக்காக அவருக்கும் அரசாங்கத்திற்கும், நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி கருத்து தெரிவிக்கையில்…..
நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையினையும் பொது மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் எனது வேண்டு கோளுக்கமைய மத்திய மாகாண சபை 10 ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.