கொரோனா தொற்று நிலையின் காரணமாக நீண்ட நாட்களாக பாடசாலைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் தற்போது 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலைகள் திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சகல பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.