200 படங்களுக்கு மேல் நடித்த சரத் பாபுவின் கவலைக்கிடமான நிலை

0
163

200 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சரத் பாபுவின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு.இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டின பிரவேசம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.சரத்பாபு சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 20 ஆம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here