200 வருடம் ஆகியும் கூட தோட்ட வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலைகளாக மாற்ற முடியவில்லை.

0
50

200 வருடம் ஆகியும் கூட தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு அரச வைத்தியசாலைகளாக மாற்ற முடியவில்லை அதற்கான தேவையும் அரசாங்கத்திடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

இன்று 24 ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
பெருந்தோட்ட சுகாதாரம் இது வரை தேசிய சுகாதாரத்தினுள் உள்வாங்கப்படாமல் இருப்பது மலையக மக்கள் முகம் கொடுக்கும் பாரிய சவாலாகும். சுமார் 550 வைத்திய நிலையங்களை வைத்திய நிலையங்கள் என்று சொல்லலாமா என்று கூட தெரியாது.மலையக பெருந்தோட்டங்கள் தோறும் இருக்கின்றன.

100 இற்கும் குறைவான அளவு தோட்ட வைத்திய உத்தியோகஸ்த்தர்கள் தான் இருக்கின்றனர்.இதனை மாற்றியமைப்பதாக காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்தவர்கள் 2006 ஆண்டும் அப்போது சுகாதார அமைச்சராக இருந்து நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் ஏற்பதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றினை தயாரித்தார்.அதில் வெறும் 50 மாத்திரம் பொறுப்பேற்று அதில் 20 மாத்திரம் தான் இப்போது நடைமுறையில் இருக்கின்றது.ஆனால் இன்னும் 525 அவ்வாறேதான் உள்ளது.இதன் பின் நல்லாட்சி காலத்தில் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருக்கும் போது அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது ஆனால் ஆட்சி மாற்றத்துடன் கைவிடப்பட்டது.இருந்த போதிலும் பாராளுமன்றத்தில் நான் இருந்த போது சுகாதாரம் வீடமைப்பு குழுவில் நான் தலைவராக இருந்த போது பெருந்தோட்ட சுகாதாரம் தொடர்பாக 2020 ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன் அதற்கு பின்னர் பாராளுமன்றம் சென்றவர்கள் அந்த அறிக்கையில் எந்தளவு பயனை பெற்றார்கள் என தெரியவில்லை ஆனால் இன்றும் பெருந்தோட்ட சுகாதார துறை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலினை தேசிய கொள்கை வகுப்பாளர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

2018 ஆண்டு கொத்தனி முறையில் அமையக்கூடிய சுகாதார கொள்கை பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டது இந்த முறையில் கொள்கை வகுப்பாளர்கள் குறிப்பிட்டிருதார்கள் புலம் பெயர் தொழிலாளர்களும் இதில் பயன்பெற கூடும் என தேசிய கொள்கை வகுப்பாளர் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன இது மூன்றாம் பிரஜையை விட மோசமான நிலைமைக்கே பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டனர். ஆகவே நாங்கள் தெரிவி;ப்பது நாங்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் அல்ல இந்த நாட்டின் பிரஜைகள் என்பதனை தெரிவிக்க விரும்புகிறேன்.

மறுபக்கமாக மலையக மக்களை காட்டுகின்ற போது சுகாதாரத்தில் தரம் குறைந்தவர்கள் போசாக்கில் மந்த போக்கு நிறைந்தவர்கள்,மரண வீதத்தில் கூடியவர்களாக பல்வேறு நோய்களை கொண்டவர்களாக இளம் வயது திருமணம் பிரசவம் இவ்வாறு சுகாதார குறிகாட்டிகளில் பெருந்தோட்ட துறை இவ்வாறு இருக்கின்றது என்கின்றது இலங்கை அரசு 2024 ஆண்டு வரையிலும் மக்கள் இந்த நாட்டிக்கு வந்து 200 ஆண்டுகள் கடந்தும் பெருந்தோட்ட சுகாதார முறைமை தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாமல் இருக்கின்றது எனவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியிலும் சகவேட்பாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நான் தெரிவிப்பது இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இந்த கொள்கை விடயத்தினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது தான்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here