மலையகத்தில் இன்று 200 வருட பூர்த்தியினை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் சிலர் மகிழ்ச்சியையும் சிலர் கவலையும் மற்றும் சிலர் 200 வருட ஞாபகத்தினையும் வெளிப்படும் வகையில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன ஆனால் தோட்டத்தில் பிறந்தவள் என்ற வகையில் தோட்டங்களில் எந்த உரிமையும் இல்லாது மிகவும் கஸ்ட்டத்திற்கு மத்தியில் சொல்லொண்ணா துயரங்களுக்கு மத்தியில் குறிப்பாக 200 வருடமாகியும் ஒரு முகவரி கூட இல்லாது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றால் மிகவும் வேதனைகுரியதும் வெட்கப்பட வேண்டியதும் என சமூக செயப்பாடாளர் கருப்பையா மைதிலி தெரிவித்தார்.
ஹட்டன் நகரில் இன்று 24 ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்தை வெளியிலிருந்து பார்ப்பவருக்கும் அதன் பசுமையும் அழகும் தான் புலப்படும் ஆனால் மலையகத்தில் லயத்தில் பிறந்து வளர்;ந்து வெளியில் வந்தவர்கள் என்ற வகையில் நாங்கள் சந்தோசப்பட முடியாது. அதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றது தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அவர்களை எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது. என்று சொன்னால் அவர்களால் வாழவே முடியாது.நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
தொழில் என்றால் நாங்கள் அந்த தொழிலில் ஈ;டுபட்டாலும் அதன் வருமானத்தில் வாழக்கூடியதாக இருக்க வேண்டும் ஆனால் மலையகத்தில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் தான் பல வழிகளில் நாட்டில் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இன்று பலர் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருப்பது தோட்டத்தொழிலாளர்கள் என்று ஆசை வார்த்தைகளையும் அழகு நிறைந்த தமிழ் வார்த்தைகளையும் பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை ஒரு இருண்ட யுகமாகதான் உள்ளது.
சம்பளத்தினை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமில்லை இதனால் அவர்கள் போசாக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர.; ஆயிரம் ரூபா சம்பளத்தை கூட போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே காணப்படுகின்றது இந்த ஆயிரம் ரூபா சம்பளத்தினை வைத்து இன்றுள்ள விலைவாசி அதிகரிப்பால் என்ன செய்ய முடியும.?; மூன்று நேரம் சாப்பிட முடியுமா? பிள்ளைகளை படிக்க வைக்க முடியுமா? ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும? ஒன்றுமே செய்ய முடியாத நிலையிலேயே இன்று தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் மந்த போசனம் அதிகரித்து கல்வி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட அத்தனையும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று தோட்ட நிர்வாகங்களும் முதலாளிமார்களும் வருமானத்தினை மற்றும் தான் எதிர்ப்பார்க்கின்றனர். காலனித்துவ ஆட்சி காலத்தில் கூட இல்லாது அளவுக்கு தொழிலாளர் துன்படுத்தப்பட்டு வருவதனை காணக்கூடியதாக உள்ளது.
தொழிலுக்கு செல்லும் பெண்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் தொடர்பாக எந்தவித கரிசனையும் தோட்ட நிர்வாகங்களோ அரசாங்கமோ அரசியல் தலைவர்களோ காட்டுவதில்லை என்று தான் கூற வேண்டும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல முடியாது காரணம் அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனைவரும் ஆண்கள் அவர்களுக்கு உடை மாற்றுவதற்கு ஒரு இடம் கிடையாது அவர்கள் உண்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கு இட வசதிகள் ஒன்றும் கிடையாது.
கொட்டும் மலையில் அடிக்கும் வெளியில் ஒரு பாறை மீதோ அல்லது தேயிலை மலையிலோ நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும். நிர்வாகம் அவர்கள் என்ன துன்பப்பட்டாலும் என்ன நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு வேண்டிய 20 கிலோ தேயிலை கொழுந்து மாத்திரம் என்று இருந்து விடுவது மிகவும் கவலையளிக்கிறது.
தொழிலாளர்களின் வாழ்விடத்தினை எடுத்து கொண்டால் அவர்கள் 10 அறைக்குள் முழு குடும்பமே வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கு காணியுரிமை கிடையாது வீட்டுரிமை கிடையாது சுருங்க சொன்னால் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியாத நிலையே உள்ளன.
இவை அனைத்து தெரிந்த தொழிற்சங்கங்களும் தொழிலதிபர்களும் இவர்களை பிரித்தாலும் தந்திரத்தினை கையெடுத்து செயப்படுகின்றன இதனால் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளன. இவர்கள் சிந்தித்து செயப்பட்டு ஒற்றமைப்பட்டால் ஒரு மாதத்தில் சகல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விடலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்