200 வருடம் கடந்த மலையக மக்களின் வாழ்வில் ஒளிபெற மூன்றுநாள் அட்டனில் சமாதானப் பிரார்த்தனை பெருவிழா

0
162

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கழிந்த நிலையில் அவர்கள் வீடுவாசல் இன்றி உரிமையின்றி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையானது பொருளாதார ரீதியிலும் உயர்வதற்கும் இவர்களே காரணமாக இருந்துள்ளனர். உலகின் இலங்கையின் நாமம் இருக்குதென்றால் அது மலையக மக்களின் தியாகத்தின் பயனே. ஆனால் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களும் இவர்களின் மக்கள் பிரதிநிதிகளும் இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் 200 ஆவது ஆண்டு பூர்த்தியில் இறைவன் இவர்களுக்கு அருள்புரிந்து பிரார்த்தனையின் பலத்தின் மூலம் இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த 24ம்திகதி தொடக்கம் அட்டன் டி.கே.டபிள்யு கலாசார மண்டபத்தில் பிரார்த்தனை சமாதன பெருவிழாவொன்றை நடத்துவதாக விஸ்வா ஜெப மிசனரியின் ஜெயம் சங்கரபாணி போதகர் தெரிவித்தார்.

நேற்று ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பிரார்தனை சமாதான பெருவிழாவினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையக மக்கள் மத்திலே தேசத்திற்கு ஆசிர்வாத்தினை கொடுக்கும் பகுதி இது தண்ணீர் மின்சாரம் தேயிலை உள்ளிட்டவற்றை தருவதற்கு நாலு ஐந்து தலைமுறைகள் உழைத்திருக்கிறார்கள்.இதனால் நாட்டிக்கும் மலையகத்திற்கும் சாந்தி சமாதானம் சகவாழ்வு மற்றும் வாழ்க்கையில் உயர்ச்சி பெற வேண்டும் என நாங்கள் பிரார்தனை செய்து வருகிறோம் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து இவர்களின் வாழ்க்கை வளம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள் மலையகத்தின் இளம் சந்ததியினர் எழும்ப வேண்டும் இங்குள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் வீடுகள் கிடைக்கப்பெற வேண்டும் அவர்கள் துன்பப்படும் போது இறைவனை நாம் நெருங்கினால் மலையகத்திற்கு ஆசிர்வாதம் கிடைக்கும்.

உலகத்திற்கு தலைசிறந்த தேயிலை கொடுத்த இலங்கைக்கு குறிப்பாக மலையகத்திற்கு உயர்வை கொடுக்காமல் இருக்க முடியாது நிச்சயம் அது கிடைக்கும் இங்கே இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களை உண்மையாக ஒப்பு கொடுத்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும்.உயர் பாடசாலைகள் இங்கு வரவேண்டும் பல்கலைக்கழகங்கள் வியாபார ஸ்தாபனங்கள் இங்கு உருவாக வேண்டும்.ஏழைகளுக்கு உதவி செய்வது கத்தர் மறுபடி திருப்பி கொடுப்பாரர்.இந்த சந்ததியினர் நிமிந்து நிற்பதற்காகவே நாங்கள் சமாதனப் பெருவிழாவினை நடத்துகிறோம்.யேசு கிறிஸ்த்து என்கிற மெய்யான தெய்வம் சிலுவையிலே பாடுபட்டு உலகிற்கு சமாதானத்தை கொடுத்தார்.

எனவே பிராத்தனை மூலம் எந்த ஒரு தடையையும் முறிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார் இன்று எமது நாட்டுக்கு வந்து பல்வேறு வழிகளில் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு வழிகளில் துணைபுரிந்துள்ளனர். ஆனால் அவர்கள் இன்றும் அதே லயத்தில் எவ்வித வசதிகளுமின்றி 200 வருடகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இதனை மாற்றவேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும் அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு இறைபிரார்த்தனை முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. ஆகவே தான் கடந்த 3 தினங்களாக இந்த மக்களின் வாழ்வில் ஒளிமயம் பிறப்பதற்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இப்பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புக்களின் போதகர் உட்பட கிறிஸ்தவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here