2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி உரிமங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

0
55

கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்துள்ள 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் என போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி உரிமங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்துச் செய்வதன் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம்தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here