2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் – ஜனாதிபதி விசேட உரை

0
3

2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2028ஆம் ஆண்டாகும் போதும் எமது அரசாங்கம்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம். 12.5 பில்லியன் சர்வதேச கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.5 பில்லியன் டொலர் 2015 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட கடனாகும். ஆலோசனைகள் கூறுபவர்கள் அப்போது அவர்களுக்கு கூறியிருக்க முடியும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here