‘2024 ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கும்’

0
176

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அறிவிக்கும் கூட்டம் நேற்று(14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

“2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களும் கடினமாக இருக்கும். இது படிப்படியாக மேம்படும். இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மறையானதாக இருக்கலாம்.

2018 மொத்த உள்நாட்டு தயாரிப்பு 94.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். 2022 மொத்த உள்நாட்டு தயாரிப்பு 77 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்தது. 2023 மொத்த உள்நாட்டு தயாரிப்பு 85 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

நாங்கள் இன்னும் 2018 ம் ஆண்டுக்கான நிலையில் இல்லை. அடுத்த வருடமும் அந்த நிலை வராது. எங்கள் பயணம் 2025 முதல் தொடங்கும். அதற்கான ஏற்பாடுதான் இது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here