2026 ஆம் ஆண்டின் முதல் 11 நாட்களுக்குள் 94,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதிகளுக்கிடையே 94,041 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 16,772 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும் ரஷ்யாவிலிருந்து 10,9270 பேரும் பிரித்தானியாவிலிருந்து 8,676 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஜெர்மனிலிருந்து 7,060 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 4,591 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




