2022 ஆம் ஆண்டை விடவும் 2026 ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அதிகமாகும் எனத் தெரிவித்த உதய கம்பன்பில, கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் என்றார்.
நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இந்த விவாதம் முழுமையடையாது. விவாதத்திற்கு தேவையான முழுமையான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் இந்த விவாதம் நடத்தப்படுகிறது.
ஐ.எம்.எஃப் திட்டம் ரூபாய் இல்லாததால் தொடங்கப்படவில்லை, டொலர்கள் இல்லாததால் தொடங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முழுவதும் ரூபாய் நெருக்கடிக்கு தீர்வு உள்ளது. மாறாக, டொலர் நெருக்கடிக்கு தீர்வு இல்லை.
ஆண்டுக்கு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது.கடனை செலுத்த ஏழு பில்லியன் டொலர்கள் தேவை.இந்த ஒப்பந்தத்தில் அதிக கடனை தவிர டொலர் நெருக்கடிக்கு தீர்வு இல்லை என்றார்..