2027ஆம் ஆண்டு முதல் சிகரெட்டுக்கு தடை: அரசின் அதிரடி அறிவிப்பு!

0
179

2020 ஆம் ஆண்டு முதல் சிகரெட்டுக்கு தடை விதிக்கப்படும் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் பெரியவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் மாணவர்களும் சிகரெட் புகைப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சிகரெட்டை தடை செய்ய அந்நாட்டு சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்து வரும் 2020ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும் சிகரெட் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவு காரணமாக அடுத்த தலைமுறையினர் சிகரெட் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆயிஷா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அதிரடி உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here