நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், 21 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆவர்.
இதற்மைய அவர்களில் ஆககூடுதலாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் இருந்து 655,289 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன 80,814 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன், கொழும்பில் சமன்மலி குணசிங்க 59,657 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சி 131,375 வாக்குகளையும், ஒஷானி உமங்க 69,932 வாக்குகளையும் பெற்றனர்.ஹேமலி சுஜீவா 66,737 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றதோடு, ஸ்டெபானி பெர்னாண்டோ 57,637 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கேகாலையில், சாகரிகா அத்தவுட 59,019 வாக்குகளையும், இரத்தினபுரியில் நிலுஷா லக்மாலி 48,791 வாக்குகளையும் பெற்றனர்.கண்டி மாவட்டத்தில், துஷாரி ஜயசிங்க 58,223 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நுவரெலியாவில், அனுஷ்கா தர்ஷனி 34,035 வாக்குகள் பெற்று தனது ஆசனத்தைப் பெற்றுள்ளார்.