இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸார் பொலிகண்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 217 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது மீட்கப்பட்ட 217 கிலோ கிராம் கஞ்சாவ வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை அதே பகுதியில் நேற்று பிற்பகல் விற்பனை நோக்கத்திற்க்காக வைக்கப்பட்டிருந்த 214 லீட்டர் மண்ணெண்ணெய் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




